திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லமுடியாமல் சாலையில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் சாலைகளில் நடப்பதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.