சென்னை சூளை, நாராயணகுரு சாலையில் மாநகராட்சிக்குட்பட்ட விளையாட்டு திடலுடன் உடற்பயிற்சிகூடமுன் இணைந்து காணப்படுகிறது. அப்பபகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை சலிப்பில்லாமலும், இளைஞர்களுக்கு புத்துயிர் உண்டாக்குவதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இங்குள்ள கழிவறை இடிந்தநிலையிலும் படுமோசமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறும் கிடக்கிறது. இதனால் அங்கு உடற்பயிற்சி மேற்கொள்ளவருபவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விளையாட்டுதிடலின் கழிவறையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.