பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால், தற்போது பெய்த மழையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குன்னம் பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.