வேலூரில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகில் ஆரணி ரோடு-அண்ணாசாலை சந்திப்பு பகுதியில் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தில் தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வாகன ஓட்டிகள் சற்று நிலை தடுமாறினாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபால், வேலூர்.