ஈரோடு கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் முதல் இந்திரா நகர் பஸ் நிறுத்தம் வரை உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்தவெளி மழைநீர் வடிகாலில் கலந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர், கிணறுகள் மாசடைகிறது. பொதுமக்களுக்கு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கொல்லம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.