அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா 18-வது வார்டு கீழத்தெருவில் உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதுடன், ஏரி ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி மிதக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.