தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-10-05 09:43 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், மதுராபுரி ஊராட்சி பிரிவு ரோட்டில் இருந்து சித்திரப்பட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல முடியாதபடி புளியமரம் உள்ளது. இந்த புளிய மரம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே புளியமரம் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்