திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழியில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாதாள சாக்கடையின் மேற்பரப்பில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதுடன் கட்டுமான கம்பிகளும் வெளியே தெரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பாதாள சாக்கடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.