பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் குரும்பாபாளையம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்குகிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.