தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-07-27 12:01 GMT

திருச்சி மாவட்டம் மருகாபுரி பாலக்குறிச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாக்கடை கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாத நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்