பாதாள சாக்கடையில் அடைப்பு

Update: 2025-07-20 13:09 GMT

பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை நீக்கும் வகையில் ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்