தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-07-20 10:53 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் நீண்ட நாட்களாக தூர்வாரி சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்