கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்

Update: 2025-07-13 12:55 GMT


கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள செம்படாம்பாளையத்தில் கழிவு நீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் செல்கிறது. மழை நேரத்தில் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்படும். எனவே இப்பகுதியில் கழிவு நீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்