தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-07-13 11:39 GMT

திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலை ஓரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவு நீர் வாய்க்கால் தூர்ந்துபோன நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல வழிஇன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீரை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்