சுகாதார சீர்கேடு

Update: 2025-06-08 17:50 GMT

சேலம் அம்மாபேட்டையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்லும் பிரதான சாலையில் மாசிநாயக்கன்பட்டி உள்ளது. அப்பகுதியில் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அருள், அம்மாபேட்டை.

மேலும் செய்திகள்