விழுப்புரம்-பானாம்பட்டு சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.