திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் மேம்பாலத்தின் கீழே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ரெயில்வே ஊழியர்கள், அருகில் உள்ள ரேஷன்கடைக்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.