கண்டாச்சிபுரம் அருகே ஆயந்தூர் குளக்கரை தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரிகத்து அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.