கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணி கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கிடைப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கால்நடைகள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.