சாலையில் வழிந்ேதாடும் கழிவுநீர்

Update: 2025-05-04 10:37 GMT

ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்