செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பாரதிதாசன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். அதிக அளவு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.