சுகாதார சீர்கேடு

Update: 2025-04-13 11:02 GMT

கூடலூர் அருகே மேல்கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் மண் மற்றும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் புதர் செடிகளும் முளைத்து உள்ளது. இதன் காரணமாக அந்த கால்வாயில் கழிவுநீர் சீராக செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்