கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் தெற்கு பகுதியில் மூன்று தெருகள் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவு செல்வதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து 2-வது தெருவில் வடிகால் வாய்க்கால் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.