ஈரோடு கே.கே.நகரில் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அடைப்பை நீக்கி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.