திண்டுக்கல் ரெயில் நிலைய குட்ஷெட் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அங்குள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் சேதமடைந்த சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்..