செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் ஏரிகரைத் தெருவில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் இணைப்பு பகுதியில் அதிக அளவு குப்பைகள் மற்றும் மணல்கள் கிடப்பதால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.