திருக்கோவிலூர்- சங்கராபுரம் செல்லும் சாலையின் அருகே நரியந்தல் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.