ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட 12-வது வார்டில் உள்ள ஈ.பி.பி. நகரில் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 6 மாதங்களாக கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.