அந்தியூர் வாரச்சந்தை அருகே செல்லும் சாக்கடை கால்வாய் தடுப்புகளின்றி காணப்படுகிறது. இதனால் எதிரெதிர் வரும் வாகனங்கள் விலகும்போது ஒன்றோடொன்று கால்வாயில் விழ வாய்ப்புள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கழிவுநீ்ர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. விபத்தை தடுக்க கால்வாயையொட்டி தடுப்புகள் அமைக்கவும், கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?