கரூர் நேரு நகரில் மெயின் சாலையில் உள்ள கருப்பண்ண சுவாமி கோவில் அருகே சாலையின் அடிப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்றபோது பாதாள சாக்கடையின் மேல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனை சுற்றி தற்போது இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது பாதாள சாக்கடைகள் உடைப்பு ஏற்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.