கள்ளக்குறிச்சி 5-வது வார்டு நடுத்தக்கா தெருவின் உள்ளே சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் சிமெண்டு கட்டை போட்டு மூடப்பட்டிருந்தது. இந்த மூடி உடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அந்த வாய்க்காலில் தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.