சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2025-02-16 12:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் திருநீர்மலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மேலும், கழிவுநீர் தேங்கி கிடக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்