தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-02-02 16:16 GMT

அந்தியூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தவுட்டுப்பாளையத்தில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மழை காலத்தில் வெள்ள நீருடன் கலந்து ரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதை தடுக்கவும், சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்