கடலூர் பஸ் நிலையம் அருகில் பூக்கடை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.