சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2025-02-02 14:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையத்தை ஒட்டி வேளச்சேரி பிரதான சாலை உள்ளது. இந்த பிரதான சாலையை இணைக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயின் மூடி பல ஆண்டுகளாக சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்யை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிக பரபரப்பான சாலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்