மதுரை மாவட்டம் வன்னிவேலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிழக்கு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இதில் அதிகளவில் முட்செடிகொடிகள் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.