சென்னை சேப்பாக்கம், பெருமாள் முதல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் 8 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகளை சரியாக அகற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பை தொட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.