சென்னை கீழ்பாக்கம், காவலர்கள் குடியிருக்கும் ஈ, எப். பிளாக் பகுதியில் கழிவுநீர் வீட்டை சூழ்ந்திருக்கிறது. இதனால் அதிக கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.