திண்டுக்கல் கிழக்கு தாலுகா நொச்சிஓடைப்பட்டியில் இருந்து கிரீன்சிட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயை ஒட்டியபடி குடிநீர் குழாய் செல்கிறது. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து குழாயில் வருகிறது. இதன் காரணமாக அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா். ஒருசிலர் அந்த குடிநீரை பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.