உசிலம்பட்டி தாலுகா அன்னம்பார்பட்டி கிராமம் நீராவி மேடு(3-வது வார்டு) பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. மழை காலங்களில் அதிகளவில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதுடன் கழிவு நீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதியதில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் ,முதியோர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?