பெரம்பலூர் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் பெரம்பலூர் நகர் பகுதியில் நவீன மயமாக்கப்பட்ட பாதாள சாக்கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.