கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி பிரேம்நகர் விஸ்தரிப்பு பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பட்ட நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள மூன்று தெருகளுக்கு செல்லும் பாதைகளில் இந்த கழிவுநீர் வாய்க்கால் மீது பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முடிவுபெறாமல் உள்ள இந்த பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.