செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பல்லவன் நகரில் தெருக்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அந்த தெருவில் வழியாக மற்றொரு தெருவிற்கு மக்கள் செல்லும்போது மூக்கை மூடி கொண்ட செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.