சென்னை அடையாறு எல்.பி. சாலைக்கு போகும் முக்கியமான பகுதி டீச்சர்ஸ் காலனி. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.