போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-12-29 17:00 GMT

அந்தியூரில் பிரம்மதேசம் பிரிவு என்ற இடத்தில் உள்ள சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்தநிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மழை பெய்யும் போது கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கால்வாயை மூடி மழை காலங்களில் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்