பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2024-12-29 13:25 GMT
பொன்மலைப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து பொன்மாலைப்பட்டி கடைவீதிகளுக்கு செல்லும் பகுதி மற்றும் பொன்னேரிபுரம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. தற்போது சாலைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், சேதமடைந்த சாலைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்