கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2024-12-29 12:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், அண்ணா நகர், எச்.எல்.காலனி ராஜா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், கழிவுநீர் தெருக்களில் நிரம்பி வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி கழிவுநீரை அகற்ற தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்