புதிய கழிவறை கட்ட கோரிக்கை

Update: 2024-12-29 11:17 GMT
கரூர் மாவட்டம், முத்தனூரில் தார் சாலையின் அருகே அப்பகுதி பெண்களின் நலன் கருதி கழிவறை ஒன்று கட்டப்பட்டது. இந்த கழிவறையை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கழிவறை சேதமடைந்து சுவர்கள் ஆங்காங்கே கீழே விழுந்து விட்டன. இதனால் கழிவறை பயன்படுத்த முடியவில்லை. மேலும், கழிவறையை சுற்றி முற்களை வெட்டி போட்டு அடைத்து வைத்தனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் புதிய சுற்றுச்சுவருடன் கூடிய புதிய கழிவறை கட்டிட தர நடவடிக்டிகை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்