உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலக்குளம் அரும்பார்த்தபுரம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.