ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட யானைக்கல் வீதி நீல கண்டி ஊருணியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஊருணி நீர் மாசடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் சூழ்நிலை உருவாகிவுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊருணியில் கலக்கும் கழிவுநீரை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.